புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி அமைப்பினால் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பொதி வழங்கும் நிகழ்வு 2022.04.25 ம் திகதி காலை 10.30 மணிக்கு பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் T. ஜெஸான், கணக்காளர் திருமதி. S.L சாஜிதா பர்வின், நிர்வாக உத்தியோகத்தர் MT சரீம், மற்றும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25000 பெறுமதியான காசோலை 2022.04.04 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவு மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வை யொட்டிய நிகழ்வு 22.03.2022. ஆம் திகதி பிரதேச செயலாளர் A.M. அப்துல் லத்தீப் தலைமையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் MCM ஹனீஃப் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் YNL சித்தி பஸீலா ஆகியோரின் நெரிப்படுத்தலில் நடைபெற்றது.
இதில் நிந்தவூரைச் சேர்ந்த பத்து மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் சிறந்த சேவையாற்றிய 30 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பிரதேசத்தின் 20 பெண் ஆளுமைகளுக்கான கௌரவமும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. மாதர் அபிவிருத்தி சங்கங்களின் 12 பேருக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. முதலையுடன் போராடி சிறுவன் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பெண் நிந்தவூர்-7 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி உம்மு சலாமாவின் வீரத்திற்கு விஷேட விருது வழங்கப்பட்டது. மேலும் தையல் போதனாசிரியை றஹீமா நிசாருக்கும் விசேட விருது வழங்கப்பட்டது.
இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் V.ஜெகதீசன் அவர்களும் கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், திருமதி. T. ஜெஸான், கணக்காளர் திருமதி. S.L சாஜிதா பர்வின் மற்றும் விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் MTA நாஹிப் அவர்களும் அம்பாரை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் S.D. எதிரிசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட பீடாதிபதி Dr. சபீனா கஸ்ஸாலி, சட்டத்தரணி J. பாத்திமா ஆகியோரால் பொண்களுடன் தொடர்பான சமகால தலைப்புகளில் விஷேட உரைகளும் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
கடந்த 2020 ம் ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைத் தாக்கத்தினால் ஏற்பட்ட சொத்து சேதத்திற்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு மற்றும் 2022.03.07 ம் திகதி ஏற்பட்ட சுழல் காற்றினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீட்டுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு என்பன வழங்கும் நிகழ்வு நேற்று 2022.03.31 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





இந்த ஆண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டம் 2022.03.18 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் MC FAISAL CASSIM அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, நிந்தவூர் பிரதேச செயலக பிரதிப் திட்டமிடல் பணிப்பாளர் AM சுல்பிகார், முன் பள்ளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் விசேடமாக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் 51 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிந்தவூர் பிரதேச மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 31 முன்பள்ளிகளுக்கு தலா
ரூ 50 000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
















