சமுர்த்தி அரநெலு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு வளர்ப்பு தொடர்பான தெளிவூட்டல் மற்றும் கோழிக்குஞ்சு வழங்கும் நிகழ்வு இன்று சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் யுஊ. அன்வர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 01.11.2021 ம் திகதி நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி
AM. அப்துல் லத்திப், அரச கால்நடை வைத்திய அதிகாரி Dr கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர், மற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் கலந்து கொண்டணர்.
 
 

நிந்தவூர் பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் தலைமையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் MC. பைசால் காசிம், திரு ரொட்ரிகோ உதவி பொலிஸ் அத்தியட்சகர் (கல்முனை) திரு ஜெலத் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (சம்மாந்துரை) நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், நிருவாக கிராம உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 29.10.2021ம் திகதி இடம்பெற்றது.

சமூர்த்தி சௌபாக்கிய ரூபா 200,000  வீட்டு வேலைத்திட்டத்திற்கான இரண்டாம் கட்ட காசோலை ரூபாய் 75,000 இன்று  22.10.2021ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி  பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமூர்த்தி திட்ட முகாமையாளர்    யூ.எல்.றஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி மலசலகூட வேலைத் திட்டத்துக்கான கொடுப்பனவு இன்று 25.10.2021ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A.C. அன்வர் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர் U.L.றஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ஆம் திகதி தேசிய உளநல தினம் எமது அரசினால் பிரகடனம் செய்யப்பட்டு உளவளத்துணைச் செயலகத்தினால் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் "சமமற்ற உலகில் உள ஆரோக்கியம்" என்ற கருப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
 
அதில் ஒரு அங்கமாக 15.10.2021ம் திகதி எமது நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் AM. அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் உளவளத்துணை தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
 
உடல் உள ஆரோக்கியத்தின் அவசியம் குறித்தும் கால பொருத்தமான கருப்பொருள் என்பது குறித்தும் சிறப்பான தலைமை உரையை பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்கள்.
 
சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உளவளத்துணை செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவ் அமைச்சின் உளவளத்துணையாளர் ஏ.ஆர்.தஹ்லான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் "சமமற்ற உலகில் உள ஆரோக்கியம்" பேணும் நுட்பம் குறித்து கருப்பொருள் விளக்க உரை ஒன்றும் அவரினால் நிகழ்த்தப்பட்டது.
 
இந்நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோக்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வை உளவளத்துணை உத்தியோகத்தர் ஆர்.எம்.றனீஸ் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top