Integrity Week - Clean Sri Lanka 2026

The inaugural event of the implementation of the "Culture of Integrity - Clean Sri Lanka" national program for honest government service.

The inaugural event of the "Culture of Integrity - Clean Sri Lanka" national program was held today (2027-07-27) Monday at the Nindavur Divisional Secretariat under the leadership of the Divisional Secretary, Attorney-at-Law AM. Abdul Latheef, with the participation of Accountant S. M. Haroon, Deputy Planning Director MM. Muhammed Sabri, Administrative Officer M.R.M. Sarim, Administrative Grama Niladhari, Additional District Registrar and all officers including the Divisional Secretariat Auditorium.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய HMA ஹஸன் அவர்கள் விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராக இன்று 2023.05.30 ம் திகதி காலை 9.00 மணிக்கு தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப், விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் MFA சனீர், நிர்வாக உத்தியோகத்தர் MTM சரீம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் AM சுல்பிகார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(2023.03.17) காலை 9.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி A.M.அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் யானைப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் வன விலங்கு உப அலுவலகம் அமைத்தல், கடல் அரிப்புக்களை தடுத்தல், குவாசி நீதி மன்றத்திற்கான இடம் ஒதுக்குதல், பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், மேலும் பல நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். MC. பைசால் காசிம், பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் , நிந்தவூர் பிரதேச சபை உதவி தவிசாளர். கௌரவ. YL . சுலைமா லெவ்வை, கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள். சுகாதார வைத்திய அதிகாரி Dr. KLM. றயிஸ், நிந்தவூர் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AMM. நஜீப் (CI), நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர். Dr. சஹீலா இஸ்ஸடீன், ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் Dr. A.M. நபீல். நீர்ப்பாசன பொறியியளாளர், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர். கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A.M. சுல்பிகார், நிர்வாக உத்தியோகத்தர், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆளணியினர் மற்றும் பெரிய பள்ளிவாசல் தலைவர், பிரதேச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம மட்ட விவசாய, மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
 
நிந்தவூர் பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட DRIZZLE - 2023 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு 2023.02.12 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் நிந்தவூர் Ameer Palace இல் நடைபெற்றது.
 
இப் பிரம்மாண்டமான நிகழ்வினை நிந்தவூர் பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமாகிய ஏ எம் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியதுடன் இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபை (Social security Board ) இல் அகில இலங்கை ரீதியில் 01 ம் இடத்தினை அடைவதற்கு தனது தனிப்பட்ட முயற்சியினால் 100 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நினைவு சின்னங்கலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
அத்துடன் உற்பத்திதிறன் போட்டியில் Special Commandation பெற உதவிய உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு, சிறப்பாக கடமையாற்றி ஓய்வு பெற்று, இடம் மாற்றலாகிச் சென்ற மற்றும் அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்கலும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் V.ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் கல்முனை பிரதேச செயலாளர் J. லியாகத் அலி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM. ஹனிபா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் MM . ஆசிக், அடடாளைச்சேனை பிரதேச செயலாளர் MCA . சாபிர், பொத்துவில் பிரதேச செயலாளர் MRM. பிர்னாஸ், மாவட்ட விவசாய பணிப்பாளர் MSA . ஹலீஸ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM. சப்ராஸ்,கணக்காய்வு அத்தியட்சகர் MA. ஹமீட், மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்களும், கணக்காளர்களும், நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பி.ப 3.00 மணியளவில் பிரம்மாண்ட விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நிறைவு பெற்றன.
 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top