கரையோரம் பேனல் மற்றும்  கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் தேசிய கடற்கரையோரச் சுத்தப்படுத்தல் மற்றும் 156 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச செயலக கடற்கரையோரத்தை மாசடைவதிலிருந்து தடுத்து கரையோரத்தை சுத்தமாக பேணும்  வண்ணம் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில்  நேற்று 2022.09.07ம் திகதி  காலை மு.ப 7.00 மணிக்கு கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது.


இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி  பயனாளிகளும் பங்குபற்றினார்கள்.

 

முதியவர்களுக்கான தேசிய செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் " ஆரோக்கியா" முதியவர்களுக்கான மருத்துவ நிதி உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட 3 முதியவர்களுக்கு நிதி உதவியாக தலா 25000/= ரூபாய் காசோலை 2022.08.16 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியயோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top