நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(2023.03.17) காலை 9.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி A.M.அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் யானைப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் வன விலங்கு உப அலுவலகம் அமைத்தல், கடல் அரிப்புக்களை தடுத்தல், குவாசி நீதி மன்றத்திற்கான இடம் ஒதுக்குதல், பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், மேலும் பல நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். MC. பைசால் காசிம், பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் , நிந்தவூர் பிரதேச சபை உதவி தவிசாளர். கௌரவ. YL . சுலைமா லெவ்வை, கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள். சுகாதார வைத்திய அதிகாரி Dr. KLM. றயிஸ், நிந்தவூர் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AMM. நஜீப் (CI), நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர். Dr. சஹீலா இஸ்ஸடீன், ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் Dr. A.M. நபீல். நீர்ப்பாசன பொறியியளாளர், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர். கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A.M. சுல்பிகார், நிர்வாக உத்தியோகத்தர், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆளணியினர் மற்றும் பெரிய பள்ளிவாசல் தலைவர், பிரதேச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம மட்ட விவசாய, மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top