நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (2019.04.17) நடைபெற்று முடிந்த இரத்த தான முகாமில் சுமார் 50 பேர்கள் இரத்த தானம் செய்திருந்தனர். விஷேடமாக இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் இதில் கலந்து கொண்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மேலும் உபசரணை செலவுகளுக்கு நிதி உதவி செய்த நிந்தவூர் 02, 09, 23 ஆகிய கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்துவதற்கு துணைநின்ற சகலருக்கும் விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.









அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சட்டத்தரணி லத்தீப் கடமையேற்பு !
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக இன்று 2019-04-10 கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
பொது நிருவாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இவர் கடந்த 2006 ம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.
ஆரம்பத்தில் உதவிப்பிரதேச செயலாளராக இணைந்து கொண்ட இவர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்களாக கடமையாற்றிய எம்.ஐ.ஏ. அமீர் மற்றும் கே.விமலநாதன் ஆகியோர்கள் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்றதையடுத்தே இந்த இடத்திற்கு ஏ.எம். அப்துல் லத்தீப் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய வி. ஜெகதீசன் ஆகியோரும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்களாக கடமைப்பொறுப்பேற்றுள்ளனர்.
பதவியுயர்வு பெற்றுச்சென்ற அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களை நிந்தவூர் பிரதேச செயலகம் வாழ்த்தி வழியனுப்புகிறது.








நிந்தவூர் பிரதேச செயலக மாபெரும் விழா-2019
நிந்தவூர் பிரதேச செயலகத்தை உற்பத்தி திறன் போட்டிக்கு தயார்படுத்தும் நோக்கின் ஆரம்ப கட்டமாகா நிந்தவூர் பிரதேச செயலாளர் AM. அப்துல் லத்திப் அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடாக அலுவலக உத்தியோகத்தர்கள் Majestic(Red), Empire(Yellow), Royal(Blue) ஆகிய மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு இன்று (2019.03.09) அட்டப்பள்ளம், Hairu Eng.Green தென்னந்தோப்பில் மாபெரும் விழா ஒன்று மிகவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் DML பண்டாரநாயக அவர்களும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் IM ஹனீபா அவர்களும் பிரதேச செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
காலை நேர நிகழ்வுகளாக இல்லங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளும் மாலை நேர நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் மற்றும் ஒய்வு பெற்றுச் சென்ற 60 உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவமும் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இல்லங்களுக்கு இடையிலான சினேகபூர்வ போட்டிகளில் மஞ்சள் நிற Empire அணி சம்பியனாக தெரிவானது. இரண்டாவதாக சிவப்பு நிற Majestic அணியும் மூன்றாவதாக நீலவண்ண Royal அணியும் தெரிவானது.












Strength to Protect the Children Propaganda Program.
"You have the Strength to protect the children Propaganda Programme" was hald in Divisional Secretarial Area, Nintavur on 2019-03-13 Wednesday around 10.30Am am to 11.30 AM under Presided of Divisioanl Secretary AM. Abdul Latheef and this programe was arranged by Department of Probation and childcare serice.
In this Event, Stickers were pasted in Puclic and private Vechicles to aware the importern of protection of the children.









71வது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கை தாய்திருநாட்டின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது-2019.02.04.
நிந்தவூர் பிரதேச செயலாளர் AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



















