அம்பாரை மாவட்ட பிரதேச செயலாளா்களுக்கான மாதாந்த அமா்வு

அம்பாரை மாவட்ட பிரதேச செயலாளா்களுக்கான மாதாந்த முன்னேற்ற ஆய்வு கூட்டம் கடந்த 2019-02-14 ஆம் திகதி நிந்தவூா் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் அம்பாரை மாவட்டச் செயலாளா் அவா்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமா்வின் ஆரம்பத்தில் பிரதேச செயலக ஊழியா்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பிரதேச செயலாளா்களுக்கான அமா்வு இடம்பெற்றது. இறுதியில் பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகள் தொடா்பான செயற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் எதிா்வரும் காலங்களில் 5S போட்டியில் வெற்றி வெறவேண்டும் எனவும் கூறப்பட்டது.

dm7

dsm1

dsm2

dsm3

 dsm5

dsm6

 

உளவளத்துணை கற்கை நெறியினை பூர்த்தி செய்தவா்ளுக்கான சான்றிதழ் வழங்கள் நிகழ்வு-2019

"திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை மற்றும் வாழ்கைத் தேர்ச்சி"  (Pre Marital Counselling & Life Skills)  கற்கை நெறியினை பூர்த்தி செய்த நிந்தவூா் பிரதேசத்தை சோ்ந்த  மாணவிகளுக்கான சான்றிதழ், விருது வழங்கும்  நிகழ்வும் 2019.01.24ம் திகதி வியாழக்கிழமை  நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளா் அவா்களின் தலைரமையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் MMM நாஜிம் அவர்கள் கலந்துகொண்டதுடன் நிந்தவூர்  உதவிப்பிரதேச செயலாளா், உதவி திட்டமிடல் பணிப்பாளா், கணக்காளா், சமுா்த்தி தலைமைபீட உத்தியோகத்தா், மாவட்ட உளவளத்துனண உத்தியோகத்தா், பிரதேச செயலக உளவளத்துனண உத்தியோகத்தா்கள் கலந்து  சிறப்பித்தனா்.

50470003 371626176964904 5531383209654222848 n

50445946 371625776964944 7534666783844728832 n

50584663 371626453631543 3934291013522161664 n

50634355 371625873631601 3192870991265005568 n

50670017 371626053631583 7771109698471723008 n

50728434 371626120298243 5850222142687281152 n

51010807 371625926964929 2966143030668558336 n

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா -2018

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா - 2018 எனும் திட்டத்தின் கீழ் 2018-12-19  ஆம் திகதி புதன்கிழமை அல்ஹாஜ் முஹம்மத்தம்பி முஹம்மது மீராசாஹிவு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரி.எம்.அன்சார் தலைமையில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் க.சுதர்சன், ஜே.எம்.சிஹார், நிந்தவூர் கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அஹமட், சிரேஸ்ட ஊடவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர்கள் வீடு சென்று பாராட்டி கௌரவித்தார்கள்.

அல்ஹாஜ் முஹம்மத்தம்பி முஹம்மது மீராசாஹிவு சிறந்ததொரு கட்டிடக் கலைஞர் ஆவார். அத்தோடு தேசிய பத்திாிகைகளில் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிஞருமாவார். மேலும், இவர் மரபு வழி சண்டைக் கலையை முறையாக கற்றுக் கொண்டவர் என்பதோடு இக்கலையை பலருக்கு கற்றும் கொடுத்துள்ளார். மேலும், இசைக் கலைஞருமாவார். அத்தோடு ஒரு சித்திரக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

48377087 2457241200984754 657009883232600064 n

48385670 2457240400984834 3271533029528436736 n

48404341 2457240337651507 3122871820433227776 n

48405917 2457241774318030 1679199614210670592 n

பிரதேச செயலாளராக கடமையேற்பு.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய  A.M. அப்துல் லதீப் அவா்கள் 2019-01-02ம் புதன் கிழமை முதல் நிந்தவூா் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ளாா்.

இவா் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன் அட்டாளைச்சேனை, சம்மாந்றை அகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளாா். இவா் சிறந்த, ஆழுமைமிக்க, சினேகமான பல்வேறு துறைசாா் அனுபவமிக்க ஒரு திறமையான நிா்வாகியாவாா்.

இவாின் பணிகள், சேவைகள், முயற்சிகள் மற்றும் தியாகங்கள் அனைத்தயைும் நிந்தவூா் மக்களுக்கு ஆற்றவேண்டும் எனப் பிராத்திக்கின்றோம்.

 

20190102 101108

 

20190102 101116

 

20190102 101121

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விழிப்புணர் நிகழ்வு.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீதியோர விழிப்புணர் நிகழ்வு 2018-12-13 ஆம் திகதி வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களின் தலைமையில்  நிந்தவூர் -04 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராம மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளக்கங்கள்¸ மற்றும் சட்டதிட்டங்கள்¸ அமைச்சினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி திட்டங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான விளக்கங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தாகள் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது. இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு சுவட் அமைப்பு அனுசரனையுடன் நடைபெற்றது.

20181213 102005

20181213 102059

20181213 101245

20181213 100417

 

 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top