உளவளத்துணை கற்கை நெறியினை பூர்த்தி செய்தவா்ளுக்கான சான்றிதழ் வழங்கள் நிகழ்வு-2019
"திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை மற்றும் வாழ்கைத் தேர்ச்சி" (Pre Marital Counselling & Life Skills) கற்கை நெறியினை பூர்த்தி செய்த நிந்தவூா் பிரதேசத்தை சோ்ந்த மாணவிகளுக்கான சான்றிதழ், விருது வழங்கும் நிகழ்வும் 2019.01.24ம் திகதி வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளா் அவா்களின் தலைரமையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் MMM நாஜிம் அவர்கள் கலந்துகொண்டதுடன் நிந்தவூர் உதவிப்பிரதேச செயலாளா், உதவி திட்டமிடல் பணிப்பாளா், கணக்காளா், சமுா்த்தி தலைமைபீட உத்தியோகத்தா், மாவட்ட உளவளத்துனண உத்தியோகத்தா், பிரதேச செயலக உளவளத்துனண உத்தியோகத்தா்கள் கலந்து சிறப்பித்தனா்.





















