சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தினால் குடும்ப அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் சுய தொழில் செய்வதற்கான உபகரணங்கள் நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இன்று 2022.03.07 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. இதில் நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

அளிப்புப்பத்திரம், உத்தரவு பத்திரம் மற்றும் கொட்டுவாடி பத்திரம் வழங்கும் நிகழ்வு 2022.02.15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணிக்கு பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கலந்து சிறப்பித்த அரசாங்க அதிபர் அம்பாறை மாவட்டம் JMA. டக்லஸ், வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளர் கிழக்கு மாகாணம் AHM.அன்ஷார், உதவிப் பிரதேச செயலாளர் நிந்தவூர் T.ஜெஸான், அம்பாறை மாவட்ட தலைமை காரியாலய காணி உத்தியோகத்தர் KLM. முஷம்மில் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏற்பாட்டுக் குழுவான நிந்தவூர் பிரதேச செயலக காணிப் பிரிவு உத்தியோகத்தர்களும், கிராம உத்தியோகத்தர்களும் மற்றும் அளிப்பு பத்திரம், உத்தரவு பத்திரம் மற்றும் கொட்டு வாடி பத்திரம் பெற்றுக் கொள்ள வந்த அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
இந்நிகழ்வின்போது 27 உத்தரவுப் பத்திரங்களும் 7 அளிப்புப் பத்திரங்களும் 01 கொட்டு வாடி பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.
 
மேலும் வருகை தந்த அதிதிகளுடன் நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
 
இலங்கை தாய்த்திரு நாட்டின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (2022.02.04) சிறப்பாக நடைபெற்றன.
 
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் சடடத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள அனைவரும் கலந்து கொண்டனர்.
 
இதில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
1. காலை 8.19 க்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
2. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி.
3. இலங்கையின் சுதந்திரம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பிரதேச செயலாளரின் உரை.
4. நன்றியுரை உதவி பிரதேச செயலாரினால் நிகழ்த்தப்பட்டது. .
5. மரநடுகை நிகழ்வு.
6. சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Hurricane Nite 2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 2022.02.03 ஆம் திகதி பி.ப 4.00 மணியளவில் நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இப் பிரம்மாண்டமான நிகழ்வினை நிந்தவூர் பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமாகிய ஏ எம் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியதுடன் இந்நிகழ்வில் கிராம நிலதாரி அலுவலக முகாமைத்துவ போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களும், உற்பத்திதிறன் போட்டியில் வெற்றி பெற உதவிய உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஓய்வு பெற்று, இடம் மாற்றலாகிச் சென்ற, அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்கலும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எம் ஏ டக்லஸ் அவர்களும் முன்னிலை அதிதிகளில் முதன்மையானவர்களுள் ஒருவருமான திகாமடுல்ல மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MC பைசல் காசிம் அவர்களும் கரையோர பிரதேச செயலாளர்களும் உதவிப் பிரதேச செயலாளர்களும் கணக்காளர்களும் நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இரவு 10.00 மணியளவில் பிரம்மாண்ட விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் சிறப்புடன் நிறைவு பெற்றன
அனைவரது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட Hurricane Nite 2022 இரவுப்பொழுது சுதந்திரமான முறையில் விடிய வேண்டும் என்று சுதந்திர தின நாளை முன்னிட்டு இனிதே நடைபெற்று முடிவடைந்தன.
2022 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (03.01.2022) நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் காலை 9 மணியளவில் தேசிய நிகழ்வுகளுக்கு ஒத்திசைவாக பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிடட அனைவருக்காக 2 நிமிட அமைதி காத்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அதனை அடுத்து கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் செயற்பாடுகள் குறித்து சுகாதார வைத்திய அதிகாரி Dr. ரைஸ் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரசைகளை, மகிழ்ச்சியான குடும்பங்களை,பண்பாடான, ஒழுக்கமுள்ள நீதியான சமுதாயத்தையும் மற்றும் நீலப் பசுமை தேசத்தையும் உருவாக்குவதட்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரச சேவையின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் அவர்கள் உரையாற்றினார்.
பின்னர் திட்டமிடல் பணிப்பாளர் T M. சுல்பிகார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
 
 
 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top