மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் உலக வங்கி நிதி உதவி வழங்கும் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு பெறுமதி மிக்க முன் பள்ளி கல்விக்குரிய புத்தகங்கள் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களினால் 2023.01.30 ம் திகதி வழங்கி வைக்கப்படடது.
2023 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (02.01.2023) நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் காலை 9.00 மணியளவில் தேசிய நிகழ்வுகளுக்கு ஒத்திசைவாக பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்காக 2 நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்ற தொனிப் பொருளின் கீழ் 2023-2048 அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கு அமைவாக 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுதல், கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது கூட பொது மக்கள் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்கி அரச சேவைகளைக் கொண்டு நடாத்துவதற்கு அரச ஊழியர்கள் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டி நினைவுபடுத்தப்பட்டதுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் குறுகிய காலத்தில் வெற்றி கொள்வதற்குத் தேவையான தேசிய மற்றும் சர்வதேச அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மையைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி உழைப்பு அதிகரித்தல் என்பவற்றுக்காக அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அவசியம் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டதுடன் உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றிய அனுபவங்களை ஆராய்ந்து அரச சேவையில் தேவையான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கும். அரச செலவுகளைக் குறைத்து அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும் அனைத்து உத்தியோகத்தர்களும் முன்னரை விடக் கவனம் செலுத்துதல், பொது மக்களுக்கான சேவை வழங்கலின் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக பிரசைகள் பட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், இணைய வழியில் சேவை வழங்கலை அறிமுகப்படுத்துவதற்கும். தலைநகரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களுக்குப் பரவலாகுவதற்கு அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் அவர்களினால் உரையாற்றப்பட்டது.
அத்துடன் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவருக்கும் தேவையான உணவுகளை நாட்டின் உள்ளே உற்பத்தி செய்வதற்காகவும் வழங்கல் செய்வதற்காகவும் அனைத்து அரசாங்க ஊழியர்களும் தங்கள் விடயப் பரப்புக்கு அப்பால் சென்று இந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டுமென பிரதேச செயலாளர் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்படடது. அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் T ஜெசான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.








புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய போட்டியில் பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் திறந்த பிரிவு சிறுகதைப்போட்டியில் பங்குபற்றிய ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் முதலாவது இடத்தைப் பெற்று தேசிய இலக்கிய விருதை நிந்தவூர் மண்ணிற்கு பெற்றுத்தந்து எமது பிரதேச செயலகத்திற்கு பெருமையை சேர்த்தார்.
ஜெம்ஷித் ஹஸன் அவர்கள் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லதீப் அவர்களின் தலைமையில் இன்று 2022.12.12ம் திகதி பிரதேச செயலகத்தில் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் T. ஜெஸான் மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க குறைந்த பட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்குதல் - 2022.
முதியயோர்களுக்கான தேசிய செயலகத்தினால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 17 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூபா 441150.00 பெறுமதியான கட்டில்கள், மெத்தைகள் இன்று 2022.12.27 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையில் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் மருத்துவ போக்குவரத்து உதவியாக 3 குடும்பங்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் மொத்தம் ரூபா 60,000 பெறுமதியான காசோலையும், அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25,000 பெறுமதியான காசோலையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 2022/12/5 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















