சமூக சேவை அமைச்சினால் மருத்துவ போக்குவரத்து உதவியாக இருவருக்கு தலா ரூபா 20000.00 வீதம் காசோலை மற்றும் அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25000.00 பெறுமதியான காசோலையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 2022/10/20 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அங்கவீனமுற்ற நபர் ஒருவருக்கு நீர் மெத்தை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தின் ஆலோசனைக்கு இணங்க முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவின் தலைமை பீட முகாமையாளர் AC.அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் AM.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று 17.10.2022ம் திகதி நிந்தவூர் 1ஆம் மற்றும் 6ம் பிரிவுகளில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.IL.Rifas அவர்களும் ஏனைய அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் T.Jezan , நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr.K.L.M.Rais அவர்களும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.M.A.Nafeel ,ஆயுர்வேத வைத்தியர் Dr. M.Y.F.Ruvaisa அவர்களும் கலந்து கொண்டதோடு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் .
 
இந்நிகழ்வின் போது போசாக்கான உணவின் முக்கியத்துவமும் போசாக்கான சத்துணவை எவ்வாறு குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்பது தொடர்பான விளக்கங்களும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டதோடு, முதியோர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது .
சமுர்த்தி சௌபாக்கிய வேலை திட்டத்தின் கீழ் நிந்தவூர் 10 ம் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு பெரும் பயனாளிக்கு இரண்டாம் கட்டமாக ரூபா 100,000 காசோலை பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று 2022.09.30 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்துகொண்டனர்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினக் கொண்டாட்டம் -2022.
“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்”
மேற்படி நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலக முன்றலில் மிகக் கோலாகலமாக 2022.10.06 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்பமாக காரியாலய உத்தியோகத்தர்களது பிள்ளைகள் சித்திரப் போட்டியில் கலந்து கொண்டு தங்களால் வரையப்பட்ட சித்திரங்கள் கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கலை நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் இடமபெற்றதுடன் அவர்களை கௌரவித்து பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் சமூக சேவை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட முதியோர் அமைப்புக்களுக்கு ரூபா 200,000 பெறுமதியான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு v. ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள், மற்றும் கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள், விசேட அதிதிகளாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, மாவடட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் ஏனைய அதிதிகளாக முகாமையாளர்(Hatton National Bank), முகாமையாளர் (Bank of Ceylon), முகாமையாளர்(Sampath Bank), முகாமையாளர் (Regional Development Bank), முகாமையாளர் (Amana Bank), மற்றும் வர்தகப் பிரமுகர்கள், அலுவலக உத்தியோகத்தார்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
 
நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ போக்குவரத்து உதவியாக சமூக சேவை திணைக்களத்தினால் ரூபா 9600.00 பெறுமதியான காசோலை, அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25000.00 பெறுமதியான காசோலையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 2022.09.21 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
 
இதில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top