2022 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (03.01.2022) நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் காலை 9 மணியளவில் தேசிய நிகழ்வுகளுக்கு ஒத்திசைவாக பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிடட அனைவருக்காக 2 நிமிட அமைதி காத்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அதனை அடுத்து கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் செயற்பாடுகள் குறித்து சுகாதார வைத்திய அதிகாரி Dr. ரைஸ் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரசைகளை, மகிழ்ச்சியான குடும்பங்களை,பண்பாடான, ஒழுக்கமுள்ள நீதியான சமுதாயத்தையும் மற்றும் நீலப் பசுமை தேசத்தையும் உருவாக்குவதட்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரச சேவையின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் அவர்கள் உரையாற்றினார்.
பின்னர் திட்டமிடல் பணிப்பாளர் T M. சுல்பிகார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
 
 
 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top