குடியுரிமை சாசனம்

கிராமமட்ட நடமாடும் சேவை
2018-12-18

நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமமட்ட நடமாடும் சேவை நிந்தவூர்-07 கிராம சேவகர் பிரிவில் கிராம உத்தியோகத்தர் எஸ்.எம். இஸ்ஹாக் அவர்களினால் 2018-12-18 ஆம் திகதி செவ்வாய்கிழமை மீனவர் சங்கத்தினால் பராமரிக்கப்படும் பல்தேவை கட்டிடததில் ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் டி.எம். முஹம்மட் அன்சார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். இங்கு கிராம மக்களுடைய பிணக்குகளுக்கு முடியுமான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஏனைய விடயங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி¸ சுகாதார மருத்துவ அதிகாரிகள், நிந்தவூர் ஏழாம் வட்டார பிரதேச சபை உறுப்பினர், மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள்¸ மற்றும் மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்¸ கிராம மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு வறுமைகோட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வின சிறப்பம்சமாகும்.

20181218 103622

20181218 103724

20181218 104217

20181218 104339

20181218 104412

20181218 104528

வன ரூப மர நடுகைத்திட்டம் - 2018

வன ரூப மரநடுகைத்திட்டத்தின் கீழ் இன்று 29.10.2018 திங்கட் கிழமை நிந்தவூர் 9ம் பிரிவில் புதிதாக அமையப்பெற்றுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலாளர், கணக்காளர், ஆயுர்வேத வைத்தியர், கிராம உத்தியோகத்தர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

2 640x480
3 640x480
6 640x480

போதை பொருளற்ற சமூகத்தை உருவாக்குவோம்

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று காலை 2018-11-01  அல் அஷ்ராக் தேசிய பாடசாலையில் இருந்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.


குறித்த விழிப்புணர்வு நடைபவணியில் பாடசாலை மாணவர்கள் போதை ஒழிப்பு சம்பந்தமான பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பிரதேச செயலகத்தை அடைந்து பிரதேச செயலாளர் TMM . அன்சார் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. விமலநாதன் அவர்களிடம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பாடசாலையின் பெருந்திரளான மாணவர்கள் ஆசிரியர்கள் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 45247026 2156357831348447 1347362813059792896 n 600x600

45305567 2156358554681708 2616894676912832512 o 600x600

45124888 2156358521348378 6088637340656336896 o 600x600

45068283 2156358061348424 565531353320259584 o 600x600

சிறுவா்களின் நலன் தொடா்பான களப்பரிசோதனை-2018

நன்னடத்தை மற்றும் சிறுவா் பராமரிப்பு தொடா்பான வேலைத்திட்டங்கள் பல நிந்தவுா் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வருட உலக சிறுவா் தின நிகழ்வாக 2018-10-31 ஆம் திகதி நிந்தவுர்-09 (வௌவால் ஓடை) ஆம் கிராம சேவகா் பிரிவிற்குட்பட்ட 100 வீட்டுத் திட்டத்தில் அதிகளவான சிறுவாகள் பாடசாலைக்குச் செல்லாமல் போதைப் பொருள் பாவனை, துா்நடத்தைகள் மற்றும் வேலைக்கு அமா்த்தப்படல் போன்ற பல பிரச்சினைகளுக்குட்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இது தொடா்பான களப்பரிசோதனை பிரதேச செயலாளா் ஜனாப் TMM. அன்சாா் அவா்களின் தலைமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வில் கிராம சேவகா் SMI. அசதுல்லாஹ், சிறுவா் நன்னடத்தை உத்தியோகத்தா், Mrs. றுமைசா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தா் Mrs. பசீலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் Mr. சியாம், Mr. அா்சாத் அலி, Mr. முசம்மில் மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தகளும் கலந்து கொண்டனா்.

மேலும் இந்த நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தகளும், சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தகளும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனா்.

20181031 102833 640x480

 20181031 102904 640x480

IMG 20181101 WA0014

IMG 20181101 WA0015

ඕල්කට් මාවත හා බැස්ටියන් මාවත සම්බන්ධ වන මැනිං වෙළදපලට පිටුපසින් වැටි ඇති මාර්ගය සම්බන්ධ කාණු පද්ධතිය කොන්ක්‍රිට් කිරිම.ඕල්කට් මාවත හා බැස්ටියන් මාවත සම්බන්ධ වන මැනිං වෙළදපලට පිටුපසින් වැටි ඇති මාර්ගය සම්බන්ධ කාණු පද්ධතිය කොන්ක්‍රිට් කිරිම.හාවඩ් බාලිකා විද්‍යාලයේ 55*45 තනි මහල් ගොඩනැගිල්ල අළුත්වැඩියා කිරීම.මධ්‍යම ගමනාගමන මණ්ඩලයේ බස්නැවතුම්පල තුල කැඩී ඇති මගී පුටු පිළිසකර කිරීම (පුටු 150 පමණ

20181010 102804 800x450

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top