கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் இலக்கிய விழாவில் பாடசாலை மட்டத்தில் வெற்றிபெற்ற 51 மாணவர்களுக்கும் மற்றும் திறந்த மட்டத்தில் வெற்றிபெற்ற 17 பேருக்கும் இன்று 2022.11.30 ம் திகதி பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது நிந்தவூர் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் V. விக்னேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.






நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இலவச சுதேச மருத்துவ முகாம் இன்று 2022.11.15 ஆம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. Abdul Latheef அவர்களின் தலைமையில்நடைபெற்றது. இந்த நிகழ்வானது சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் AB. Nilmiya அவர்களின் ஏற்பாட்டில் இனிதே இடம்பெற்றது. சுமார் 100 க்கு மேற்பட்ட பொதுமக்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுவின் ஊடாக 5 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 2022.11.02 ம் திகதி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ றிபாஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டட இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.




2020ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய உற்பத்திதிறன் போட்டியில் நிந்தவூர் பிரதேச செயலகம் விசேஷட பாராட்டு தகைமை (special commendation) பெற்றுக்கொண்டது. இதற்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2022.11.09 ம் திகதி மொனறாகலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.





















