நிந்தவூர் பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட DRIZZLE - 2023 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு 2023.02.12 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் நிந்தவூர் Ameer Palace இல் நடைபெற்றது.
 
இப் பிரம்மாண்டமான நிகழ்வினை நிந்தவூர் பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமாகிய ஏ எம் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியதுடன் இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபை (Social security Board ) இல் அகில இலங்கை ரீதியில் 01 ம் இடத்தினை அடைவதற்கு தனது தனிப்பட்ட முயற்சியினால் 100 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நினைவு சின்னங்கலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
அத்துடன் உற்பத்திதிறன் போட்டியில் Special Commandation பெற உதவிய உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு, சிறப்பாக கடமையாற்றி ஓய்வு பெற்று, இடம் மாற்றலாகிச் சென்ற மற்றும் அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்கலும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் V.ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் கல்முனை பிரதேச செயலாளர் J. லியாகத் அலி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM. ஹனிபா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் MM . ஆசிக், அடடாளைச்சேனை பிரதேச செயலாளர் MCA . சாபிர், பொத்துவில் பிரதேச செயலாளர் MRM. பிர்னாஸ், மாவட்ட விவசாய பணிப்பாளர் MSA . ஹலீஸ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM. சப்ராஸ்,கணக்காய்வு அத்தியட்சகர் MA. ஹமீட், மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்களும், கணக்காளர்களும், நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பி.ப 3.00 மணியளவில் பிரம்மாண்ட விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நிறைவு பெற்றன.
 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top