போதை பொருளற்ற சமூகத்தை உருவாக்குவோம்
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று காலை 2018-11-01 அல் அஷ்ராக் தேசிய பாடசாலையில் இருந்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு நடைபவணியில் பாடசாலை மாணவர்கள் போதை ஒழிப்பு சம்பந்தமான பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பிரதேச செயலகத்தை அடைந்து பிரதேச செயலாளர் TMM . அன்சார் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. விமலநாதன் அவர்களிடம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பெருந்திரளான மாணவர்கள் ஆசிரியர்கள் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


















