குடியுரிமை சாசனம்

தெய்வீக கிராம நிகழ்வு 2021..............
 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேசசெயலகம் இணைந்து நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வானது கடந்த 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு அட்டப்பளம் ஶ்ரீ சிங்காரபுரமாரியம்மன் ஆலயம், விநாயகர் அறநெறிப்பாடசாலையில் இடம் பெற்றதுடன் திருமுன்னிலை அதிதியாக சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் நிந்தவூர் பிரதேசசெயலாளர் ஜனாப்.எ.எம் அப்துல் லத்திப் தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பதில் அரசாங்க அதிபர் திரு வே.ஜெகதீஸன் கலந்துகொண்டதுடன் ஆன்மீக அதிதிகளாக சிவஶ்ரீ சாந்தரூபன் குருக்கள்,சிவஶ்ரீ பத்மலோஜன் சர்மா,சிவஶ்ரீ ஜாதகன் சர்மா,பூசகர் வே.தயாலன்,கலந்துகொண்டதுடன்.
சிறப்பு அதிதிளாக திரு வே.வாமதேவன் சிவனருள் பவுண்டேசன் செயலாளர், திரு ச.ரகுநாதன் கமு விநாயகர் வித்தியாலய அதிபர், அட்டப்பளம் சிங்காரபுரமாரியம்மன் ஆலய தலைவர் திரு ரி.கோபாலன்,சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் திரு செ.உதஜெயக்குமார், நிந்தவூர் ஶ்ரீசீங்காரபுரமாரியம்மன்" அறநெறிப்பாடசாலை தலைவர் திரு எஸ் பிரபாகரன்,பொறுப்பாசிரியர் திருமதி எஸ். ஜிவிதா அட்டப்பளம் ஶ்ரீ சித்திவிநாயகர் தலைவர் திரு வ.சந்திரன் ஶ்ரீ முருகன் ஆலய தலைவர் திரு மு. இராமச்சந்திரன் மற்றும் பொது அமைப்புக்கள்,ஆலய பிரதிநிதிகள், சமூக அமைப்புக்கள், மாதர்சங்கங்கள், நிருவாகிகள் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் இந்து கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள்,பொற்றோர்கள்,அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top