குடியுரிமை சாசனம்

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி குடும்பங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் திட்டமிடல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 11.11.2021 ம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் முனைவோருக்கான குறித்த குடும்பங்கள் செய்யும் தொழிலில் ஏற்படும் இலாபம் நட்டம் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளுதல், திட்டமிடல் உளநலப் பயிற்சி, தொழிலை மேம்படுத்துவது எவ்வாறு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் T ஜெஸான்,சமுர்த்தி பிரிவு தலைமை பீட முகாமையாளர் AC அன்வர், சமுர்த்தி செயற்திட்ட முகாமையாளர் UL. றஹ்மதுல்லாஹ், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான A. றபீக்கான், MAM ஷப்றாஸ், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் A.சப்ரின் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top