‘’சுரகிமு கங்கா" ஆறுகளை பாதுகாக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2021, 1 ம் கட்ட நிகழ்வாக கலியோடை ஆற்றங்கரையில் பழமரக்கன்றுகளும், மூங்கில் மர கன்றுகளும் நடுவது தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 13.10.2021 ம் திகதி பி.ப 03.00 மணிக்கு இடம்பெற்றது.
 
இதில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் (கல்முனை), உதவிப்பணிப்பாளர் வன பராமரிப்பு திணைக்களம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (சம்மாந்துறை), விவசாய போதனாசிரியர், கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சுற்றாடல் பிரிவு) மற்றும் விவசாயிகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
 
 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top