கிராமமட்ட நடமாடும் சேவை
2018-12-18

நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமமட்ட நடமாடும் சேவை நிந்தவூர்-07 கிராம சேவகர் பிரிவில் கிராம உத்தியோகத்தர் எஸ்.எம். இஸ்ஹாக் அவர்களினால் 2018-12-18 ஆம் திகதி செவ்வாய்கிழமை மீனவர் சங்கத்தினால் பராமரிக்கப்படும் பல்தேவை கட்டிடததில் ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் டி.எம். முஹம்மட் அன்சார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். இங்கு கிராம மக்களுடைய பிணக்குகளுக்கு முடியுமான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஏனைய விடயங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி¸ சுகாதார மருத்துவ அதிகாரிகள், நிந்தவூர் ஏழாம் வட்டார பிரதேச சபை உறுப்பினர், மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள்¸ மற்றும் மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்¸ கிராம மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு வறுமைகோட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வின சிறப்பம்சமாகும்.

20181218 103622

20181218 103724

20181218 104217

20181218 104339

20181218 104412

20181218 104528

News & Events

19
Dec2018
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா - 2018

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா - 2018

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலைஞர் சுவதம்” கௌரவிப்பு விழா...

18
Dec2018
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விழிப்புணர் நிகழ்வு.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விழிப்புணர் நிகழ்வு.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விழிப்புணர் நிகழ்வு.புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீதியோர விழிப்புணர்...

Scroll To Top