சிறுவா்களின் நலன் தொடா்பான களப்பரிசோதனை-2018
நன்னடத்தை மற்றும் சிறுவா் பராமரிப்பு தொடா்பான வேலைத்திட்டங்கள் பல நிந்தவுா் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வருட உலக சிறுவா் தின நிகழ்வாக 2018-10-31 ஆம் திகதி நிந்தவுர்-09 (வௌவால் ஓடை) ஆம் கிராம சேவகா் பிரிவிற்குட்பட்ட 100 வீட்டுத் திட்டத்தில் அதிகளவான சிறுவாகள் பாடசாலைக்குச் செல்லாமல் போதைப் பொருள் பாவனை, துா்நடத்தைகள் மற்றும் வேலைக்கு அமா்த்தப்படல் போன்ற பல பிரச்சினைகளுக்குட்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இது தொடா்பான களப்பரிசோதனை பிரதேச செயலாளா் ஜனாப் TMM. அன்சாா் அவா்களின் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் கிராம சேவகா் SMI. அசதுல்லாஹ், சிறுவா் நன்னடத்தை உத்தியோகத்தா், Mrs. றுமைசா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தா் Mrs. பசீலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் Mr. சியாம், Mr. அா்சாத் அலி, Mr. முசம்மில் மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தகளும் கலந்து கொண்டனா்.
மேலும் இந்த நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தகளும், சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தகளும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனா்.


















