2023 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (02.01.2023) நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் காலை 9.00 மணியளவில் தேசிய நிகழ்வுகளுக்கு ஒத்திசைவாக பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களின் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்காக 2 நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
 
அதனைத் தொடர்ந்து நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்ற தொனிப் பொருளின் கீழ் 2023-2048 அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கு அமைவாக 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுதல், கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது கூட பொது மக்கள் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்கி அரச சேவைகளைக் கொண்டு நடாத்துவதற்கு அரச ஊழியர்கள் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டி நினைவுபடுத்தப்பட்டதுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் குறுகிய காலத்தில் வெற்றி கொள்வதற்குத் தேவையான தேசிய மற்றும் சர்வதேச அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மையைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி உழைப்பு அதிகரித்தல் என்பவற்றுக்காக அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அவசியம் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டதுடன் உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றிய அனுபவங்களை ஆராய்ந்து அரச சேவையில் தேவையான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கும். அரச செலவுகளைக் குறைத்து அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும் அனைத்து உத்தியோகத்தர்களும் முன்னரை விடக் கவனம் செலுத்துதல், பொது மக்களுக்கான சேவை வழங்கலின் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக பிரசைகள் பட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், இணைய வழியில் சேவை வழங்கலை அறிமுகப்படுத்துவதற்கும். தலைநகரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களுக்குப் பரவலாகுவதற்கு அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் அவர்களினால் உரையாற்றப்பட்டது.
 
அத்துடன் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவருக்கும் தேவையான உணவுகளை நாட்டின் உள்ளே உற்பத்தி செய்வதற்காகவும் வழங்கல் செய்வதற்காகவும் அனைத்து அரசாங்க ஊழியர்களும் தங்கள் விடயப் பரப்புக்கு அப்பால் சென்று இந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டுமென பிரதேச செயலாளர் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்படடது. அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் T ஜெசான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
 
 

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top