கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் இலக்கிய விழாவில் பாடசாலை மட்டத்தில் வெற்றிபெற்ற 51 மாணவர்களுக்கும் மற்றும் திறந்த மட்டத்தில் வெற்றிபெற்ற 17 பேருக்கும் இன்று 2022.11.30 ம் திகதி பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது நிந்தவூர் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் V. விக்னேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.




















