கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கலை இலக்கிய விழா இன்று 29.11.2021 ம் திகதி நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களும் கௌரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி T ஜெஷான் ஆசிக் விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் TM ரின்ஷான் சிறப்பு அதிதியாக கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் உப தலைவர் (கலாசார அதிகாரசபை), நிர்வாக உத்தியோகத்தர் (கிராம சேவைகள்), மேலதிக மாவட்ட பதிவாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.



















